/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறுமுகையில் அனுமதியின்றி மண் எடுப்பு : போலீஸிடம் தாசில்தார் புகார் சிறுமுகையில் அனுமதியின்றி மண் எடுப்பு : போலீஸிடம் தாசில்தார் புகார்
சிறுமுகையில் அனுமதியின்றி மண் எடுப்பு : போலீஸிடம் தாசில்தார் புகார்
சிறுமுகையில் அனுமதியின்றி மண் எடுப்பு : போலீஸிடம் தாசில்தார் புகார்
சிறுமுகையில் அனுமதியின்றி மண் எடுப்பு : போலீஸிடம் தாசில்தார் புகார்
ADDED : ஜூலை 20, 2024 01:23 AM
மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே இரும்பறை கரடு பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்ததாக கூறி, மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், சிறுமுகை போலீசாரிடம் புகார் அளித்தார்.
சிறுமுகை அருகே இரும்பறை கிராமம் உள்ளது. இங்கிருந்து அன்னூர் செல்லும் சாலையில் இரும்பறை கரடு பகுதி உள்ளது. இப்பகுதியில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக, சிறுமுகை வனச்சரகர் மனோஜிற்கு, நேற்று முன் தினம் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், அங்கு மண் எடுத்து கொண்டிருந்த 6 லாரிகள், ஒரு ஜே.சி.பி., இயந்திரம், ஒரு ஹிட்டாச்சி இயந்திரத்தை பிடித்து நிறுத்தினர். பின் வனத்துறையினர் நிலத்தை ஆய்வு செய்ததில் அது வனப்பகுதிக்குள் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மேட்டுப்பாளையம் வருவாய் துறையினர், அங்கு வந்து ஆய்வு செய்ததில், அது பட்டா நிலம் என தெரியவந்தது. பின் தாசில்தார் சந்திரன் பட்டா நிலத்தில் அனுமதியின்றி மண் எடுக்கப்பட்டது தொடர்பாக சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் கூறுகையில், பட்டா நிலத்தில் எந்த வித அனுமதியும் பெறாமல் மண் எடுத்தது தொடர்பாக 6 லாரி, ஒரு ஜே.சி.பி. இயந்திரம், ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.
----