/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மேட்டுப்பாளையம் சாலையில் நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்புமேட்டுப்பாளையம் சாலையில் நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம் சாலையில் நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம் சாலையில் நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம் சாலையில் நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2024 01:23 AM

கோத்தகிரி;கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நீண்ட நேரம் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில், விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பலா மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.
தற்போது, பலா சீசன் என்பதால், மரங்களில் பலா காய்த்துள்ளன. இதனால், தாழ்வான பகுதியில் இருந்து காட்டு யானைகள் தேயிலை தோட்டம் மற்றும் சாலையில் முகாமிட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் உட்பட டிரைவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ே நற்று மாலை மூன்று காட்டு யானைகள் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் நின்றிருந்தன.
யானைகள் நிற்பதை பார்த்த வாகன டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தினர். நீண்ட நேரம் யானைகள் சாலையை விட்டு இறங்காமல் அங்கேயே நின்றது.
இதனால், இருப்புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு வழியாக, யானைகள் தேயிலை ேதாட்டத்திற்குள் இறங்கியதை அடுத்து, ஒரு மணிநேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.
வனத்துறையினர் கூறுகையில், 'மரங்களில் பலா பழங்கள் காய்த்து தொங்குவதால், அதனை உட்கொள்ள யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, டிரைவர்கள், தொழிலாளர்கள் உட்பட இங்கு வாரும் மக்கள் எச்சரிக்கையுடன் ெசல்வதுடன், யானைகளுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க ேவண்டும்,' என்றனர்.