/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காரை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி காரை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி
காரை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி
காரை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி
காரை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி
ADDED : ஜூலை 29, 2024 02:35 AM
கூடலுார்:கூடலுார் தேவர்சோலை அருகே நள்ளிரவில் காட்டு யானை காரை தாக்கி, சேதப்படுத்திய சம்பவத்தில் கணவன், மனைவி உயிர் தப்பினர்.
கூடலுார் தேவர்சோலை மரபிலாவு பகுதியை சேர்ந்தவர், ஷியாபுதீன். இவர் மனைவியுடன் கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு, நள்ளிரவு, 1:30 மணிக்கு தேவர்சோலையை கடந்து காரில் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது, 'திரிடிவிஷன்' அருகே, எதிரே வந்த, காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்து காரை நிறுத்தினர்.
ஆக்ரோஷமாக வந்த யானை, தந்தத்தால் காரின் முன் பகுதியை குத்தி சேதப்படுத்தியது. அச்சத்தில், அலறிய அவர்கள் தாமதிக்காமல் காரை பின்னோக்கி நகர்த்தினர். யானை அங்கிருந்து சென்றது. இதனால், அவர்கள் உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் வந்து, தம்பதியினரை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர். தொடர்ந்து யானை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், இரவில் உலா வரும் காட்டு யானைகளால், அவசர தேவைக்கு கூட வெளியில் வர முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டவும்; அவைகள் மீண்டும் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.