Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வெலிங்டன் ராணுவ பகுதியில் சூழல் பூங்கா உருவாக்க திட்டம்

வெலிங்டன் ராணுவ பகுதியில் சூழல் பூங்கா உருவாக்க திட்டம்

வெலிங்டன் ராணுவ பகுதியில் சூழல் பூங்கா உருவாக்க திட்டம்

வெலிங்டன் ராணுவ பகுதியில் சூழல் பூங்கா உருவாக்க திட்டம்

ADDED : ஜூலை 30, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
குன்னுார்;குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள புதிய ஏரியை சுற்றி சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கியது.

கடந்த, 2022ம் ஆண்டு நடந்த 'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிக்கும் 'மிஷன் அம்ரித் சரோவர்' என்ற புதிய முயற்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில், 'மிஷன் அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திற்குட்பட்ட சிங்கார தோப்பு பகுதியில் கடந்த, 1870ல் லெப்டினன்ட் கர்னல் ராபர்ட் என்பவரின் மூலம் உருவாக்கப்பட்ட ஏரி பராமரிப்பில்லாமல், சதுப்பு நிலமாக மாறி இருந்ததால் இத்திட்டத்தில் நீர் நிலையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி கடந்த, 2023ம் ஆண்டு மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் 'கிளீன் குன்னுார்,' தன்னார்வ அமைப்பு சார்பில் இந்த பகுதிகள் துாய்மை செய்து ஏரி உருவாக்கப்பட்டது.

தற்போது, மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஏரியில் நீர் முழுமையாக நிரம்பி உள்ளது. இதன் சுற்றுப்புற பகுதிகளை பாதுகாப்பதுடன் இங்கு சூழல் பூங்கா உருவாக்க ராணுவ மையம் முடிவு செய்தது.

இதன்படி, எம்.ஆர்.சி., கன்டோன்மென்ட் வாரியம், 'ஆர்மி ஹெட் குவார்ட்டர்ஸ்' மற்றும் இந்துஜா பவுன்டேஷன், கேரியர்ஸ் தன்னார்வ அமைப்பு சார்பில், தனியாக செக்டேம் உருவாக்கி இதன் சுற்றுப்புற பகுதிகளை பொலிவுபடுத்தி சூழல் பூங்காவாக உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்டோன்மென்ட் அதிகாரிகள் கூறுகையில், 'இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவதுடன் பல்வேறு அரிய வகை தாவரங்களும் நடவு செய்து, சிறந்த சூழல் பூங்காவாக மாற்றப்படும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us