/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ் ஸ்டாண்டில் கடிகார பகுதி பிரம்மாண்ட பேனரால் அதிருப்தி பஸ் ஸ்டாண்டில் கடிகார பகுதி பிரம்மாண்ட பேனரால் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டில் கடிகார பகுதி பிரம்மாண்ட பேனரால் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டில் கடிகார பகுதி பிரம்மாண்ட பேனரால் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டில் கடிகார பகுதி பிரம்மாண்ட பேனரால் அதிருப்தி
ADDED : ஜூன் 13, 2024 11:26 PM
குன்னுார் : குன்னுார் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் பிரம்மாண்ட பேனர் வைத்து பழமை வாய்ந்த கடிகாரம் மறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெடுஞ்சாலை மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிரம்மாண்ட பேனர்கள் வைப்பது உயிர்பலி ஏற்பட காரணமாக உள்ளது. இதனையொட்டி பேனர்கள் வைக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், குன்னுரில் பழமை வாய்ந்த பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் தடை குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு பேனர் இரு இடங்களில் நேற்று வைக்கப்பட்டது.
மிகவும் பழமை வாய்ந்த இங்குள்ள கடிகாரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மார்க்கெட் வருபவர்களுக்கு நேரம் அறிந்து கொள்ள பயனுள்ளதாக இருந்த நிலையில், தற்போது இந்த கடிகாரம் வி.பி.தெரு., சுற்றுப்புற பகுதிகளில் மறைக்கப்படுகிறது.
குன்னுார் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'விதிமீறி பேனர்கள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், கடிகாரத்தை மறைத்தும் பேனர் வைக்க அனுமதித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதனை அகற்ற வேண்டும்,' என்றனர்.