/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை வாகனங்களை இயக்க சிரமம் கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை வாகனங்களை இயக்க சிரமம்
கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை வாகனங்களை இயக்க சிரமம்
கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை வாகனங்களை இயக்க சிரமம்
கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை வாகனங்களை இயக்க சிரமம்
ADDED : ஜூன் 18, 2024 11:17 PM

பந்தலுார்':பந்தலுார் பஜாரை ஒட்டி கற்கள் முழுவதும் பெயர்ந்து குழியாக மாறிய சாலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் பஜாரை ஒட்டிய,13 மற்றும் 14 வார்டு பகுதிகள் உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதிக்கு செல்லும் சாலை, கற்கள் முழுமையாக பெயர்ந்து குழியாக மாறி காட்சியளிக்கிறது. இதனால், இந்த பகுதி மக்கள் வாகனங்களை வீடுகளுக்கு கொண்டு செல்ல முடியாமல், சாலை ஓரங்களில் நிறுத்தி செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலையின் நிலை குறித்து நகராட்சிக்கு, இப்பகுதி மக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.