/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இ-பாஸ் சோதனை சாவடி பகுதிகள் கழிப்பிட வசதி இல்லாததால் சிரமம் இ-பாஸ் சோதனை சாவடி பகுதிகள் கழிப்பிட வசதி இல்லாததால் சிரமம்
இ-பாஸ் சோதனை சாவடி பகுதிகள் கழிப்பிட வசதி இல்லாததால் சிரமம்
இ-பாஸ் சோதனை சாவடி பகுதிகள் கழிப்பிட வசதி இல்லாததால் சிரமம்
இ-பாஸ் சோதனை சாவடி பகுதிகள் கழிப்பிட வசதி இல்லாததால் சிரமம்
ADDED : ஜூன் 05, 2024 12:51 AM
குன்னுார்;குன்னுார்- மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடியில், போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மகளிர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஜூன், 30-ம் தேதி வரை இ--பாஸ் நடைமுறையில் உள்ளது. இதற்காக இங்கு நாள்தோறும் இரு 'ஷிப்ட்' முறைப்படி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் குன்னுாரில் இருந்து மகளிர் பலரும் இங்கு பணிக்கு சென்று வருகின்றனர். இங்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அங்குள்ள ஒரு கழிப்பிடத்தின் 'சின்டெக்ஸ்' தொட்டி உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி விடுகிறது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பணியாற்றும் பணியாளர்கள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகள் கூறுகையில்,'மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, இங்கு கூடுதல் கழிப்பிட வசதி ஏற்படுவது உடன் தண்ணீர் நிரந்தரமாக வைக்க புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,' என்றனர்.