/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதிய குற்றவியல் சட்டங்கள் திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் புதிய குற்றவியல் சட்டங்கள் திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டங்கள் திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டங்கள் திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டங்கள் திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 27, 2024 01:15 AM
ஊட்டி;மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி, ஊட்டியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், எல்.பி.எப்., மண்டல தலைவர் அக்கீம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் போஜராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மக்கள் சட்ட மைய தமிழ் மாநில இயக்குனர் வக்கீல் விஜயன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 'மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்தின் அதிகாரங்களை பறித்துள்ளது. இந்த சட்டங்கள் அனைத்து மக்களையும் குற்றவாளியாக மாற்றும் படி உள்ளதால், புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,' என, கோஷங்கள் எழுப்பப்பட்டது. பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.