/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அயனி பலா நாற்றுகள் உற்பத்தி செய்ய முடிவு அயனி பலா நாற்றுகள் உற்பத்தி செய்ய முடிவு
அயனி பலா நாற்றுகள் உற்பத்தி செய்ய முடிவு
அயனி பலா நாற்றுகள் உற்பத்தி செய்ய முடிவு
அயனி பலா நாற்றுகள் உற்பத்தி செய்ய முடிவு
ADDED : ஜூன் 11, 2024 01:42 AM

கூடலுார்;கூடலுாரில் அழிந்து வரும் அயனி பலா நாற்றுகளை, நாடுகாணி ஜீன்பூல் தாவர மைய நர்சரியில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடலுார் பசுமை மாறாத இயற்கை வனங்கள், வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. பழங்களை நம்பி வாழும் சிறிய வன உயிரினங்களின் உணவு தேவை வனங்களில் கிடைக்கும் பழங்களின் மூலம் பூர்த்தி செய்து வருகிறது.
கோடைகாலங்களில் நாட்டு கொய்யா, நாவல் பழம், பலாப்பழம், 'அயனி' பலா உள்ளிட்ட சீசன் பழங்கள் அவைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. அதில், அயனி பலா மரங்கள், பர்னிச்சர் தேவைக்காக வன கொள்ளையர்களால் பெருமளவில் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சாலையோரம் தனியார் இடங்களில் மட்டுமே இந்த மரங்கள் உள்ளன. இவைகள், தற்போது அழியும் நிலையில் உள்ளது.
வனவிலங்குகளின் உணவு தேவை பூர்த்தி செய்து வரும் இதனை பாதுகாப்பதுடன், இதன் நாற்றுகளை உற்பத்தி செய்து, வனப்பகுதிகளில் நடவு செய்ய வனவிலங்கு ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் அயனி பலா நாற்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவுபடி, நாடுகாணி வனச்சரகர் வீரமணி, ஜீன்பூல் உயிரியலாளர் கோமதி மற்றும் வன ஊழியர்கள், கோழிக்கோடு சாலை ஓரங்களில் உள்ள அயனி பலா மரங்களிலிருந்து விழும் பழுத்த பழங்களிலிருந்து அதன் விதைகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நர்சரிகளில் அயனி பலா செடிகளை அதிகளவில் உற்பத்தி செய்து, வனங்களில் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
அதற்காக, அதன் விதைகளை சேகரிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்,'