/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வாழை மரங்கள் சேதம்; யானைகளால் நஷ்டம் வாழை மரங்கள் சேதம்; யானைகளால் நஷ்டம்
வாழை மரங்கள் சேதம்; யானைகளால் நஷ்டம்
வாழை மரங்கள் சேதம்; யானைகளால் நஷ்டம்
வாழை மரங்கள் சேதம்; யானைகளால் நஷ்டம்
ADDED : ஜூலை 25, 2024 10:15 PM

கூடலுார்: கூடலுார், கவுண்டன்கொல்லி பகுதியில் விவசாய தோட்டத்தில் நுழைந்த யானைகள், 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் குச்சிமுச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்ட காட்டு யானைகள் இரவில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம், இரவு கவுண்டங்கொல்லி பகுதியில் நுழைந்த, 5 காட்டு யானைகள், மானுபா என்பவர் தோட்டத்தில் நுழைந்து, 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதி மக்கள் யானைகள் விரட்டினர். காட்டு யானைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள் கூறுகையில், ''தொடர்ந்து காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல், கடன் சுமையை அதிகரித்துள்ளது. வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், விவசாய தோட்டங்களில் யானை வருவது குறித்து, தகவல் தெரிவித்தால் வன ஊழியர்கள் உடனடியாக, அப்பகுதிக்கு சென்று யானை விரட்டும் பணிகள் ஈடுபடுவது குறித்து வன அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் யானையால் ஏற்படும் சேதங்கள் குறையும்,'' என்றனர்.