சூலூர் அருகே லாரிகள் மோதல் டிரைவர் பலி
கோவை, உக்கடம் காந்தி நகரை சேர்ந்த பாலு மகன் தம்புரான், 36. டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது லாரியை ஓட்டிக்கொண்டு அவிநாசி ரோட்டில் சென்றார். அப்போது, அரசூர் பிரிவு அருகே ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தம்புரான் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
3 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது-
கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம் மற்றும் வையாபுரி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம் மற்றும் வையாபுரி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
----கட்டட தொழிலாளியை அடித்து கொல்ல முயற்சி
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ரவி மகன் ஹரிஹரன், 25. சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பரான தேவாவுடன் பாப்பம்பட்டி டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர்.