/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வீடுகளில் விரிசல்: காரணம் தெரியாமல் மக்கள் அச்சம் வீடுகளில் விரிசல்: காரணம் தெரியாமல் மக்கள் அச்சம்
வீடுகளில் விரிசல்: காரணம் தெரியாமல் மக்கள் அச்சம்
வீடுகளில் விரிசல்: காரணம் தெரியாமல் மக்கள் அச்சம்
வீடுகளில் விரிசல்: காரணம் தெரியாமல் மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 29, 2024 02:37 AM

கூடலுார்;கூடலுார் கோக்கால் அருகே, வீடுகளில் விரிசல் ஏற்பட்டது குறித்த காரணம் தெரியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மேல் கூடலுார் கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதிகளில் வீடுகள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அந்த வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.
'குடியிருப்பை ஒட்டி, அரசு மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்காக மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது,' என, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில், 'நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி பொதுமக்கள் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது,' என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட பகுதியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர் ஆய்வு செய்து,' இப்பகுதியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீட்டுடன் மாற்றிடம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்,' என, உறுதி அளித்தனர்.
அப்பகுதியில் ஆய்வு செய்த, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் வெங்கடேஷ், 'வீடுகள் விரிசல் ஏற்பட்டத்தான் காரணம் குறித்து, புவியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன் பின். விரிசலுக்கான காரணம் தெரிய வரும்,' என, கூறினார்.
ஆனால், விரிசல் தொடரும் நிலையில், அப்பகுதியில் புவியியல் துறையினால் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'வீடுகளில் விரிசல் ஏற்பட்டு ஒரு மாத காலம் ஆகிறது. எனினும், புவியியல் துறையினர் இதுவரை ஆய்வு செய்யவில்லை. விரிசலுக்கான காரணம் தெரியாமல் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, புவியியல் துறையினர், உடனடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து விரிசலுக்கான காரணத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.