/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் தொடர் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரியில் தொடர் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரியில் தொடர் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரியில் தொடர் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரியில் தொடர் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஜூலை 19, 2024 07:10 AM

ஊட்டி : தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாக்களில் உள்ள, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, கடந்த 16ம் தேதி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றும் நீலகிரியில் மழை விடாமல் பெய்து வந்தது. நேற்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டன.
கனமழை நீடித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலுார், குந்தா, பந்தலுார் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.