/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு; சிலைகளுக்கு விடுதலை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு; சிலைகளுக்கு விடுதலை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு; சிலைகளுக்கு விடுதலை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு; சிலைகளுக்கு விடுதலை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு; சிலைகளுக்கு விடுதலை
ADDED : ஜூன் 05, 2024 09:59 PM

பெ.நா.பாளையம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளின் மீது போர்த்தப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டன.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தன. இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மூடி 'சீல்' வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
சுவர்களில் எழுதப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் வாசகங்கள் அழிக்கப்பட்டன. சுவரொட்டிகள், பேனர், விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகளை உள்ளாட்சி நிர்வாகித்தனர் அகற்றினர். முக்கிய சந்திப்புகளில் இருந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் துணியால் முடப்பட்டன.
நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதை அடுத்து நேற்று பல்வேறு இடங்களில் சிலைகளின் மீது போர்த்தப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டன.
இது குறித்து, அரசியல் கட்சியினர் கூறுகையில், 'முக்கிய இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அவற்றை மீண்டும் அமைக்க படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். துடியலூர் அருகே பன்னீர்மடை பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலை மீது இருந்த துணி அகற்றப்பட்டது' என்றனர்.
மூடி 'சீல்' வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ., அலுவலகங்களின் சீல் அகற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.