/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாயம் கலந்த தேநீர் விற்பதாக புகார்; அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல் சாயம் கலந்த தேநீர் விற்பதாக புகார்; அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
சாயம் கலந்த தேநீர் விற்பதாக புகார்; அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
சாயம் கலந்த தேநீர் விற்பதாக புகார்; அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
சாயம் கலந்த தேநீர் விற்பதாக புகார்; அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2024 08:20 PM
ஊட்டி : ஊட்டியில் உள்ள பெரும்பாலான கடைகளில், சாயம் கலந்த தேநீர் விற்பனை செய்வதாக, புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக ஊட்டி பகுதி அமைந்தள்ளது. நாள்தோறும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை அதிகமாக உள்ளது. நகரில், 100க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளன.
ஒரு கப் தேநீர், 10 முதல், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் பல கடைகளில் சாயம் கலந்த தேயிலை துாள் பயன்படுத்துவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதே போல, கோத்தகிரி, குன்னுார் பர்லியார் உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில், தேயிலை துாளில் சாயம் கலந்து, தேநீர் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் பல மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
தேயிலை விளையும் நீலகிரி மாவட்டத்திலேயே, தேயிலை துாளில் கலப்படம் செய்வதால், மக்கள் உடல் உபாதைக்கு ஆளாகி வருகின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில்,'' மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட கடைகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.