/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ இயக்குவதாக புகார் ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ இயக்குவதாக புகார்
ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ இயக்குவதாக புகார்
ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ இயக்குவதாக புகார்
ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ இயக்குவதாக புகார்
ADDED : ஜூலை 29, 2024 02:36 AM
பந்தலுார்;'பந்தலுார் கொளப்பள்ளியில் அனுமதி இல்லாமல் சில ஆட்டோக்கள் இயங்கி வருகிறது,' என, புகார் எழுந்துள்ளது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் ஜீப்புகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆட்டோக்கள் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஆட்டோ இயக்கும் பணி முக்கிய வேலை வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆனால், கொளப்பள்ளி பகுதியில் சில ஆட்டோக்கள், எந்தவிதமான ஆவணங்கள் மற்றும் அனுமதியும் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. அதில், ஒரு சிலர் இதுபோன்ற ஆட்டோக்களை அதிக அளவில் வாங்கி, டிரைவர்களை வைத்து இயக்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த போதும், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
பொதுமக்கள் கூறுகையில், 'வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.