/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கலெக்டர் முகாம் அலுவலகம் கரடிகள் உலா: வனத்துறை ஆய்வு கலெக்டர் முகாம் அலுவலகம் கரடிகள் உலா: வனத்துறை ஆய்வு
கலெக்டர் முகாம் அலுவலகம் கரடிகள் உலா: வனத்துறை ஆய்வு
கலெக்டர் முகாம் அலுவலகம் கரடிகள் உலா: வனத்துறை ஆய்வு
கலெக்டர் முகாம் அலுவலகம் கரடிகள் உலா: வனத்துறை ஆய்வு
ADDED : ஜூன் 18, 2024 11:20 PM

ஊட்டி:ஊட்டி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கரடிகள் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. 65 சதவீதம் வனப்பகுதியாக இருப்பதால் இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. குறிப்பாக, காட்டெருமை, கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, ஊட்டி தமிழகம் சாலையில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில், 2 கரடிகள் புகுந்தது. பின் ஒன்றாக அந்த கரடிகள் தமிழகம் சாலை வழியாக வெளியே சென்று வனப்பகுதிக்குள் சென்று விட்டன. கரடிகள் உலா வந்த வீடியோ பதிவுகளை வைத்து, வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.