/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடுஹட்டி பகுதியில் கொட்டும் மழையிலும் துாய்மை பணி நடுஹட்டி பகுதியில் கொட்டும் மழையிலும் துாய்மை பணி
நடுஹட்டி பகுதியில் கொட்டும் மழையிலும் துாய்மை பணி
நடுஹட்டி பகுதியில் கொட்டும் மழையிலும் துாய்மை பணி
நடுஹட்டி பகுதியில் கொட்டும் மழையிலும் துாய்மை பணி
ADDED : ஜூலை 29, 2024 11:40 PM
கோத்தகிரி;கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சியில், கொட்டும் மழையிலும் துாய்மை பணி நடந்து வருகிறது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில், 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் ஊராட்சி சார்பில் துாய்மை பணிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
பள்ளி வளாகம், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள குப்பைகள், 16 துாய்மை பணியாளர்கள் மூலம் அன்றாடம் அகற்றப்பட்டு வருகிறது.
ஊராட்சி அலுவலகம் கோத்தகிரி கட்டபெட்டு இடையே, பிரதான சாலையில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் உட்பட, குப்பைகளையும், மது பாட்டில்களையும் வீசி செல்வது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று துாய்மை பணியாளர்கள் கொட்டும் மழையிலும் பிளாஸ்டிக் உட்பட பிற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.