/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
ADDED : ஜூன் 05, 2024 09:49 PM
மேட்டுப்பாளையம் : ஊராட்சிகளில் உள்ள மேல் நிலை குடிநீர் தொட்டிகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீரில் குளோரின் கலப்படுகிறது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், பெள்ளாதி, பெள்ளேபாளையம், சிக்கதாசம்பாளையம், வெள்ளியங்காடு என பதினேழு ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. பவானி ஆறு, அத்திக்கடவு ஆறு ஆகியவற்றில் இருந்து இந்த குடிநீர் தொட்டிகளுக்கு சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக, தண்ணீர் நிரப்பப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு கொசுக்கள், மழை நீர் மற்றும் குடிநீரில் வளரக்கூடியவை என்பதால் குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தி, அதில் குளோரின் கலக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேல் நிலை குடிநீர் தொட்டிகள் மாதம் இரு முறை சுத்தம் செய்யப்படுகின்றன. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, அதில் நீரின் அளவுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட அளவுகளின் படி குளோரின் கலக்கப்படுகிறது.
இதுதவிர வீடு வீடாக ஊராட்சி பணியாளர்கள் சென்று, குடிநீர் தொட்டிகள், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,' என்றார்.