/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பந்தலுாரில் 'ரெப்கோ' வங்கி சேவைகள் பெற அழைப்பு பந்தலுாரில் 'ரெப்கோ' வங்கி சேவைகள் பெற அழைப்பு
பந்தலுாரில் 'ரெப்கோ' வங்கி சேவைகள் பெற அழைப்பு
பந்தலுாரில் 'ரெப்கோ' வங்கி சேவைகள் பெற அழைப்பு
பந்தலுாரில் 'ரெப்கோ' வங்கி சேவைகள் பெற அழைப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:11 AM

பந்தலுார்;பந்தலுார் தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பு, ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. விஜயசிங்கம் வரவேற்றார்.
பேரவை பிரதிநிதி வக்கீல் கணேசன் தலைமை வகித்து பேசுகையில்,''தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக ரெப்கோ வங்கி துவக்கப்பட்டது. வங்கியில் 'அ' வகுப்பு உறுப்பினர்களுக்கு கல்வி கடன் நகை கடன் சொத்து கடன் மற்றும் அனைத்து விதமான கடன்களும் இரண்டு சதவீதம் வட்டி குறைவாக வழங்கப்படுகிறது. 4 சதவீத வட்டியில் இரண்டு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
மற்றும் மருத்துவ உதவி, இலவச தையல் இயந்திரம், அரசு பொது தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்லுாரியில் படிப்பதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு முதல் தொழிற்பயிற்சி மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. எனவே, இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் வங்கியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் அனைவரும் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர் நாகநாதன் உட்பட பலர் பேசினர். நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.


