/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 19, 2024 02:57 AM
அன்னுார்:பயிர் காப்பீடு செய்ய வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
அன்னுார் வட்டார வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கை :
அன்னுார் வட்டாரத்தில், நெல், மக்காச்சோளம், சோளம், உளுந்து, பச்சைபயறு, கொள்ளு ஆகிய பயிர்களுக்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. பயிர் காப்பீடு செய்வதால் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பொருளாதார பாத்திப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். பயிர் கடன் பெற்ற விவசாயிகள், பெறாத விவசாயிகள் அனைவரும் வேளாண் உதவி இயக்குனர், உதவி வேளாண் அலுவலர்கள் ஆகியோரை அணுகி, ஆதார் நகல், பயிருக்கான அடங்கல், சிட்டா, வங்கி பாஸ் புத்தக நகல், பிரிமிய கட்டணம் ஆகியவற்றை சமர்ப்பித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.