/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஒரசோலை பள்ளியில் காலை உணவு வார கூட்டம் ஒரசோலை பள்ளியில் காலை உணவு வார கூட்டம்
ஒரசோலை பள்ளியில் காலை உணவு வார கூட்டம்
ஒரசோலை பள்ளியில் காலை உணவு வார கூட்டம்
ஒரசோலை பள்ளியில் காலை உணவு வார கூட்டம்
ADDED : ஆக 06, 2024 09:49 PM
கோத்தகிரி : கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சர் காலை சிற்றுண்டி உணவு திட்டம் சார்ந்த வாராந்திர கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். திட்ட பணியாளர் ஷீலா, மாநில அரசின் சிற்றுண்டி திட்டம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில், மாணவர்களுக்கு தங்கு தடையற்ற குடிநீர், மாணவர்களின் சரியான வருகை பதிவு மற்றும் உணவு பொருட்களின் தர ஆய்வு குறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.