Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அனுமதி இல்லா காப்பகத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்: அதிகாரிகள் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

அனுமதி இல்லா காப்பகத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்: அதிகாரிகள் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

அனுமதி இல்லா காப்பகத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்: அதிகாரிகள் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

அனுமதி இல்லா காப்பகத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்: அதிகாரிகள் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

ADDED : ஜூலை 11, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
பந்தலுார் : நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில் கடந்த, 1999ம் ஆண்டு, 'லவ்ஷேர்' என்ற பெயரில், 'சாரிட்டபிள் டிரஸ்ட்' செயல்பட துவங்கியது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த காப்பகத்தை அகஸ்டின் மற்றும் அவரது மனைவி கிரேசி நடத்தி வந்தனர். அகஸ்டின், கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவம்பாடி என்ற இடத்தில், சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். இந்த காப்பகம் செயல்படுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெறவில்லை.

புகாரின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், 13 மன நோயாளிகள், சிறுவன் மற்றும் இளம் பெண், என, 15 பேரை மீட்டு, கோவை மற்றும் ஊட்டி முகாம்களில் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் நேரடி ஆய்வு செய்தனர். கடந்த, 25 ஆண்டுகளில், 500க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், 200க்கும் மேற்பட்டோர் அவர்களின் உறவினர்களால் மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். அதில், கடந்த, 2002ம் ஆண்டு மச்சிக்கொல்லி என்ற இடத்தை சேர்ந்த, நல்ல நிலையில் இருந்த சிமி, 22, என்ற இளம் பெண், வீட்டிலிருந்து வெளியேறி இங்கு தங்கி இருந்தார்.

திடீரென விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் மட்டுமே வெளியே தெரிந்தது. அதற்கு பின் எந்த தகவலும் இல்லை.

மேலும், உயிரிழந்த பலரின் உடல்கள் காப்பகம் அருகே உள்ள, சதுப்பு நிலப் பகுதியில் அடக்கம் செய்துள்ளனர்.

இறந்தவர்களின் பெயர் போன்ற விபரங்களை வருவாய் துறை, போலீசார் மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.

மேலும், இந்த காப்பகத்தில் இறக்கும் நபர்களை, இரவு நேரத்தில், யாருக்கும் தெரியாமல், துாக்கி சென்று அடக்கம் செய்துள்ளனர். சதுப்பு நிலப்பகுதியில் அடக்கம் செய்ததால் இங்குள்ள குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.

பல்வேறு குளறுபடிகளால் அந்த காப்பகம் நேற்று 'சீல்' வைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்தவர்களின் உடல் உறுப்புகள் ஏதேனும் அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசார் கூறுகையில், 'பல தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், அதன் உரிமையாளர் அகஸ்டின் என்பவரை கைது செய்தால் மட்டுமே முழு விபரம் தெரிய வரும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us