/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காமராஜ புரத்தில் காற்றில் பறந்த கூரைகள் காமராஜ புரத்தில் காற்றில் பறந்த கூரைகள்
காமராஜ புரத்தில் காற்றில் பறந்த கூரைகள்
காமராஜ புரத்தில் காற்றில் பறந்த கூரைகள்
காமராஜ புரத்தில் காற்றில் பறந்த கூரைகள்
ADDED : ஜூலை 22, 2024 11:01 PM

குன்னுார்:குன்னுார் பேரட்டி காமராஜர் புரம் பகுதியில், 6 வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் புரத்தில், 150 வீடுகள் உள்ளன. சமீபத்தில் இங்குள்ள வீடுகளுக்கு பேரூராட்சியின் சார்பில் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், தல ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூரைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முந்தினம் முதல் தொடர்ந்து பலத்த காற்று வீசி வரும் நிலையில் இங்குள்ள, 6 வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
ஏற்கனவே கூரைகளின் அடிப்பாகத்தில் கான்கிரீட் தளத்தில் பல இடங்களில் லேசாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளதாலும் மின்தடை ஏற்பட்டு சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
மக்கள் கூறுகையில்,'தரம் இல்லாமல் அமைக்கப்பட்டதால் இவை காற்றில் துாக்கி வீசப்பட்டு தோட்டங்களில் விழுந்து கிடக்கின்றன.
எனவே, இவற்றை மீண்டும் சீரமைத்து தர வேண்டும்,' என்றனர்.