/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்
ADDED : ஜூன் 08, 2024 12:32 AM

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்காவில் மழையின் காரணமாக மலர்கள் அழுகி வருகின்றன.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனக்காக, 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. கோடை சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் சிம்ஸ் பூங்காவில் இருந்த மலர்கள் அழுகி வருகின்றன.
குறிப்பாக, மேரி கோல்டு, ஜின்னியா உட்பட பல வகையான மலர்களும் அழுகியுள்ளது. அதே நேரத்தில் டேலியா சில இடங்களில் மட்டுமே அழுகியுள்ளது. பூங்காவின் சில பகுதிகளில் மட்டும் மலர்கள் பொலிவாக உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதிகளில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.