/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ADDED : ஜூன் 17, 2024 11:45 PM

குன்னுார்:குன்னுார் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் தொழுகை நடந்தது.
குன்னுார் வண்டி பேட்டையில் இருந்து இஸ்லாமியர் ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு சின்ன பள்ளிவாசல் இமாம் முப்திமுஜிபூர் ஹசினி தலைமையில் ஈத் தொழுகை நடந்தது.
பெட்போர்டு பள்ளிவாசல் இமாம் முஜ்பூர் ரஹ்மான் காஸிமி , பெரிய பள்ளி வாசல் இமாம் வாசீம் அக்ரம் மாஸாஹிரி, வெலிங்டன் பள்ளிவாசல்இமாம் நியமதுல்லாஹ் தாவூதி, கே.எம்.கே.. நகர் பள்ளிவாசல் இமாம் ஜஹாங்கீர் உலுாமி, ஓட்டுப்பட்டறை பள்ளிவாசல் இமாம் முஹம்மது மழாஹிரி , கபர்ஸ்தான் பள்ளி வாசல் இமாம் தல்ஹா தாவூதி உட்பட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், குன்னுார் ஐக்கிய ஜமாஅத், ஜமாத்துல் உலாமா நிர்வாகிகள் உட்பட, 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இதே போல ஊட்டி, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழும் இஸ்லாமிய மக்கள், பெருநாளான, பக்ரீத் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டாடினர். அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.