/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குட்டி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணைகுட்டி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
குட்டி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
குட்டி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
குட்டி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
ADDED : ஜூன் 05, 2024 12:59 AM
கூடலுார்:மசினகுடி அருகே, தாயையை பிரிந்த குட்டி யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை, மசினகுடி வனக்கோட்டம், சீகூர் வனச்சரகம் ஆனைகட்டி வனப்பகுதியில், வன ஊழியர்கள் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் காயங்களுடன் குட்டி யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வனச்சரகர் தயானந்தன் வனத்துறையினர் அதன் உடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பிறந்து ஒரு மாதமான குட்டி யானை தாயை பிரிந்து தனியாக வந்திருக்கலாம். அப்போது மாமிசம் உண்ணி தாக்கியதில் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின், இறப்புக்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.