Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஐயப்பன் கோவில் 37 வது ஆண்டு விழா புஷ்ப அபிஷேகம் அமர்க்களம்

ஐயப்பன் கோவில் 37 வது ஆண்டு விழா புஷ்ப அபிஷேகம் அமர்க்களம்

ஐயப்பன் கோவில் 37 வது ஆண்டு விழா புஷ்ப அபிஷேகம் அமர்க்களம்

ஐயப்பன் கோவில் 37 வது ஆண்டு விழா புஷ்ப அபிஷேகம் அமர்க்களம்

ADDED : ஜூலை 09, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
குன்னுார்;வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், 37வது ஆண்டு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காலை, 6:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம்; 6:30 மணிக்கு அபிஷேகம்; 7:00 மணிக்கு உஷ பூஜை; 9:00 மணிக்கு கலச பூஜை நடந்தது. 11 மணிக்கு கலர்ஸ் அபிஷேகம் உச்ச பூஜை ஆகியவை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஐயப்பன் அலங்கார ரத ஊர்வலம் கோவிலில் துவங்கி போகித் தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. செண்டை மேளம், சங்கு முழங்க ஐயப்பனுக்கு புஷ்ப அபிஷேகம் நடந்தது. முன்னதாக விளக்கு மற்றும் பல்வேறு வகையான மலர்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்.

தொடர்ந்து, தீபாராதனை, புஷ்ப அபிஷேகம், தாயம்பகா, மத்தள பூஜை பிரசாத விநியோகம் ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை பொது செயலாளர் முரளிதரன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us