/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பழங்குடியினர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுபழங்குடியினர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பழங்குடியினர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பழங்குடியினர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பழங்குடியினர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 09, 2024 01:37 AM

கோத்தகிரி;கோத்தகிரி கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில், காவல்துறை சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில், புதிய ஆட்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து வருகிறது.
இதை தொடர்ந்து, 'புதிய நபர்களின் நடமாட்டம் இருப்பின், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதுடன், அந்த நபர்களிடம் இருந்து எந்த பொருட்களையும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்,' என, அவ்வப்போது போலீசார் பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட எல்லை பகுதிகளில் அமைந்துள்ள பழங்குடியினர் கிராமங்களில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து போலீசார் மூலமாக மனுக்கள் பெறப்பட்டன.
அதன்படி, சோலுார் மட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில், போலீசார் மூலமாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், கெங்கரை, பாவியூர், மெட்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பழகுடியின மக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, நீலகிரி எஸ்.பி., தலைமையில், மக்களுக்கு 'டார்ச் லைட்' மற்றும் கம்பளி வழுக்கப்பட்டது. குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், டி.எஸ்.பி., குமார், சிவகாமி எஸ்டேட் குழும இயக்குனர் சிவகுமார் உட்பட போலீசார் மற்றும் பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.