/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ எஸ்.பி., வாகனத்தில் பைக் மோதி இன்னொரு வாலிபரும் பலி எஸ்.பி., வாகனத்தில் பைக் மோதி இன்னொரு வாலிபரும் பலி
எஸ்.பி., வாகனத்தில் பைக் மோதி இன்னொரு வாலிபரும் பலி
எஸ்.பி., வாகனத்தில் பைக் மோதி இன்னொரு வாலிபரும் பலி
எஸ்.பி., வாகனத்தில் பைக் மோதி இன்னொரு வாலிபரும் பலி
ADDED : ஜூலை 09, 2024 08:16 PM
மேட்டுப்பாளையம்:நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யின் வாகனம் மீது பைக் மோதிய விபத்தில், இரண்டாவது வாலிபர் நேற்று உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., வாகனம், கோவை செல்வதற்காக நேற்று முன் தினம் ஊட்டியில் இருந்து புறப்பட்டது. வாகனத்தில் எஸ்.பி., இல்லை. கல்லார் துாரிப்பாலம் அருகே எஸ்.பி., வாகனம் வந்து கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த பைக், வாகனத்தின் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஊட்டியை சேர்ந்த அல்டாப், 21 மற்றும் ஜூனைத், 21 என, இரு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது.
மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த இரு வாலிபர்களையும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் அல்டாப் வரும் வழியிலேயே உயிரிழந்தார். ஜுனைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அவரும் உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், ''பைக் அதிவேகமாக வந்து, எஸ்.பி., வாகனம் மீது மோதியது. பைக்கில் வந்தவர்கள் மது அருந்தியுள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.
----