/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 15 நாட்கள் நடந்த உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு 15 நாட்கள் நடந்த உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
15 நாட்கள் நடந்த உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
15 நாட்கள் நடந்த உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
15 நாட்கள் நடந்த உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : ஜூலை 27, 2024 01:29 AM
கூடலுார்:கூடலுார் அஞ்சுகுன்னு பகுதியில் காட்டு யானை பிரச்னை தொடர்பாக, 15 நாட்கள் நடந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
கூடலுார், தேவர்சோலை அஞ்சுக்குன்னு ஒட்டிய மக்கள், காட்டு யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அஞ்சுகுன்னு பகுதியில், 11ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வனத்துறையினர், முதுமலை கும்கி யானைகள் உதவியுடன், விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள், நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை; போராட்டம் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, 'போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தங்கள் சிலர் பங்கேற்று, பிரச்சனைகள் குறித்து பேசி தீர்வு காண வேண்டும்,' என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று போராட்டத்தை கைவிட்ட மக்கள், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தனர். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, 15 நாட்கள் நடைபெற்று உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிடப்பட்டது.