/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு 'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு
'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு
'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு
'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு
ADDED : ஜூன் 04, 2024 12:16 AM
ஊட்டி;பெங்களூருவில் நடைபெறும் 'அக்னிவீர்' வாயு ஆட்சேர்ப்பு பேரணியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்வுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள, ஏழாவது ஏர்மேன் தேர்வு மையத்தில் நம் ராணுவத்தால், ஜூலை, 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.
இந்த பேரணியில் கலந்து கொள்வதற்கு, 'மே 22ம் தேதி முதல், ஜூன், 5ம் தேதி வரை, https://agnipathvayu.cdac.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை கலைஞர் தேர்வுக்கான, கல்வி தகுதி குறைந்தது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசை கருவிக்கான, கிரேட்-5 அல்லது அதற்கு சமமான சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட இசை நிறுவனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு, 2004 ஜன., 2ல் இருந்து, 2007, ஜூலை, 2ம் தேதிக்குள் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான இசைக்கலைஞர்கள், இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.