ADDED : ஜூலை 17, 2024 11:44 PM
ஊட்டி : ஊட்டி அருகே குருகுலம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, பள்ளி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாக தலைவர் வாசுகி தலைமை வகித்தார். முதல்வர் சுரேஷ்பாபு, துணை முதல்வர் நதியா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், காமராஜரின் தலைமை பண்பு, அறிவுத்திறன், தன்னலமற்ற செயல்கள் போன்ற பண்புகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து, பள்ளியில் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் தலைவர் சார்மி உட்பட, 10 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை மோனிஷா நன்றி கூறினார்.