/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வாகனத்தை தாக்கிய காட்டு யானை இரவில் ஓட்டுனர்கள் அலறல் வாகனத்தை தாக்கிய காட்டு யானை இரவில் ஓட்டுனர்கள் அலறல்
வாகனத்தை தாக்கிய காட்டு யானை இரவில் ஓட்டுனர்கள் அலறல்
வாகனத்தை தாக்கிய காட்டு யானை இரவில் ஓட்டுனர்கள் அலறல்
வாகனத்தை தாக்கிய காட்டு யானை இரவில் ஓட்டுனர்கள் அலறல்
ADDED : ஜூன் 20, 2024 05:21 AM

கூடலுார், : கூடலுார் கீழ்நாடுகாணி அருகே, தேன்பாறா பகுதியில் காட்டு யானை காரை தாக்கிய சம்பவத்தால் ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் கீழ்நாடுகாணியில் இருந்து, கேரளா மாநிலம் நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. இங்குள்ள தேன்பாறா பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சாலையோரம் குட்டியுடன் நின்றிருந்த மூன்று யானைகள் திடீரென சாலைக்கு வந்து காரை தாக்கியுள்ளன. அதில் இருந்தவர்கள் அலறினர்.
அப்போது, அங்கிருந்த பிற வாகன ஓட்டுனர்கள் சப்தமிட்டு அதனை விரட்டி காரையும் அதிலிருந்த பயணிகளையும் காப்பாற்றினர். இச்சம்பவத்தால் வாகன ஓட்டுனர்கள், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'மாநில எல்லை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிடும் காட்டு யானைகள், அடிக்கடி சாலை கடந்து செல்வது வழக்கம். யானைகள் சாலை கடக்கும் வரை காத்திருந்து ஓட்டுனர்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.