/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலை பாம்பு தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலை பாம்பு
தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலை பாம்பு
தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலை பாம்பு
தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலை பாம்பு
ADDED : ஜூன் 07, 2024 12:11 AM
பந்தலூர்:பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சூசம்பாடி பகுதி அமைந்துள்ளது. இதனை ஒட்டி தனியார் எஸ்டேட் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை நேரம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, தொழிலாளர்கள் குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டத்தில், பதுங்கிய மலைப்பாம்பை மீட்டு, முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் விடுவித்தனர்.
இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.