/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கம்பத்தில் மோதிய சுற்றுலா பஸ்: பெரும் விபத்து தவிர்ப்பு கம்பத்தில் மோதிய சுற்றுலா பஸ்: பெரும் விபத்து தவிர்ப்பு
கம்பத்தில் மோதிய சுற்றுலா பஸ்: பெரும் விபத்து தவிர்ப்பு
கம்பத்தில் மோதிய சுற்றுலா பஸ்: பெரும் விபத்து தவிர்ப்பு
கம்பத்தில் மோதிய சுற்றுலா பஸ்: பெரும் விபத்து தவிர்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 12:14 AM

கூடலுார்:கூடலுாரில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாபஸ் மின்கம்பத்தில் மோதிய விபத்தில், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஊட்டியிலிருந்து, பெங்களூரு செல்லும் சுற்றுலா பஸ் நேற்று முன்தினம் மாலை கூடலுாரை நோக்கி வந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மின்கம்பம் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார், பஸ்சை மாற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.