/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 600 போலீசார் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 600 போலீசார்
ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 600 போலீசார்
ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 600 போலீசார்
ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 600 போலீசார்
ADDED : ஜூன் 04, 2024 12:13 AM
ஊட்டி;ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்று நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு, 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி லோக்சபா தொகுதி ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது. கடந்த ஏப்., 19 ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தது.
இந்த ஆறு தொகுதிகளில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய தொகுதிகளில், 689 ஓட்டு சாவடிகள்; சமவெளி பகுதிகளான, மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில், 930 ஓட்டு சாவடிகள்,' என, மொத்தம், 1,619 ஓட்டு சாவடிகள் உள்ளன. இவற்றின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்ட 'ஸ்ட்ராங்' ரூமில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தில், 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. துணை ராணுவம் உட்பட மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையை ஒட்டி, 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கு, 470 அலுவலர் தேர்வு செய்யப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கைக்காக, 84 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. 23 சுற்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இதில், 'ஒவ்வொரு டேபிளுக்கு ஒரு மைக்ரோ அப்சர்வர், ஒரு ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்,' என, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு குறித்து போலீசார் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். தவிர, ஆறு தொகுதிகளின் தாசில்தார்கள் ஓட்டு எண்ணிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.