/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரூ.4.4 கோடியில் 44 புதிய வீடுகள்: பாகன்கள் மகிழ்ச்சி ரூ.4.4 கோடியில் 44 புதிய வீடுகள்: பாகன்கள் மகிழ்ச்சி
ரூ.4.4 கோடியில் 44 புதிய வீடுகள்: பாகன்கள் மகிழ்ச்சி
ரூ.4.4 கோடியில் 44 புதிய வீடுகள்: பாகன்கள் மகிழ்ச்சி
ரூ.4.4 கோடியில் 44 புதிய வீடுகள்: பாகன்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 03, 2024 12:35 AM

கூடலுார்;-முதுமலை தெப்பக்காடு யானை முகாமில், யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, 4.4 கோடி ரூபாய் செலவில், 44 வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பராமரிக்கப்படும் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளும், அதனை பாசத்தோடு வளர்த்த பழங்குடியின பாகன் பொம்மன்;பெள்ளி தம்பதிகள் இடையே உள்ள உறவை மையமாக கொண்டு ஆவண படம் எடுக்கப்பட்டது.
ஊட்டியை சேர்ந்த கார்த்திகி என்பவர் இயக்கிய 'தி எலிபென்ட் விஸ்பர்ரர்ஸ்' என்ற ஆவண படத்துக்கு, கடந்த ஆண்டு, சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், முதுமலை யானைகள் முகாமுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதிய வீடு கட்ட நிதி ஒதுக்கீடு
அதில், நடித்த பாகன் பொம்மன்; பெள்ளி தம்பதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதல்வர் ஸ்டாலின், அவர்களை சென்னைக்கு அழைத்து, பாராட்டி பரிசு வழங்கினார். தொடர்ந்து, முதுமலை, டாப்சிலிப் யானை முகாமில் பணியாற்றி வரும் யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு, தமிழக அரசு சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு அத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், முதுமலை தெப்பக்காடு, டாப்சிலிப் யானை முகாமிலில் பணியாற்றி வரும் யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்ட, அரசு சார்பில், 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
முதுமலையில், 44 வீடுகள்
இத்திட்டத்தின்படி, முதுமலை யானைகள் முகாமில் பணியாற்றி பழமையான லைன் வீடுகளில் வசிக்கும், 22 யானை பாகன்கள், 22 உதவியாளர்களுக்கு, 44 வீடுகள் கட்ட, 4.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காகன, இடம் தேர்வு செய்யப்பட்டு புதிதாக, 44 வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதனால் பாகன்கள்; உதவியாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், ''மாநில அரசு அறிவித்தபடி, தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரியும் யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 44 புதிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
பணிகளை விரைந்து முடித்து பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும்,''என்றார்.