/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு
ADDED : ஜூலை 19, 2024 02:36 AM
குன்னுார்;''மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது குறைந்தது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
குன்னுார்- எடப்பள்ளி இளித்தொரை சமுதாய கூடத்தில் ஊரக பகுதி மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, 'மருந்து பெட்டகங்கள், ஊட்டச்சத்து பெட்டகங்கள், பயிர்கடன் ஆணைகள்,' என, 26 பயனாளிகளுக்கு, 11.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகள் வழங்கி பேசியதாவது:
மக்களுடன் முதல்வர் திட்டத்தை தர்மபுரியில் முதல்வர் துவக்கி வைத்தார். அரசு துறைகளை அன்றாடம் அணுகும் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சேர்க்க வேண்டும். ஊரக பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த முகாம் மாவட்டத்தில், 26 இடங்களில் நடத்தப்படுகிறது. 15 அரசு துறைகளை சேர்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடத்தப்படும்.
இத்திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது, குறைந்தது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார். முகாமில், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி கவுசிக், குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நாகபுஷ்பராணி உட்பட பலர் பங்கேற்றனர்.