/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேயிலை ஏலத்தில் ஏற்றம் ரூ.21.29 கோடி வருமானம் தேயிலை ஏலத்தில் ஏற்றம் ரூ.21.29 கோடி வருமானம்
தேயிலை ஏலத்தில் ஏற்றம் ரூ.21.29 கோடி வருமானம்
தேயிலை ஏலத்தில் ஏற்றம் ரூ.21.29 கோடி வருமானம்
தேயிலை ஏலத்தில் ஏற்றம் ரூ.21.29 கோடி வருமானம்
ADDED : ஜூலை 19, 2024 02:38 AM
குன்னுார்;நீலகிரியில் நடந்த தேயிலை ஏலத்தில், 21.29 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்ததால். தேயிலை துாள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கடந், 5 வாரங்களாக தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உற்பத்தியும் உயர்ந்துள்ளது.
இதனால், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 28வது ஏலத்தில், தேயிலை துாள் வரத்து மற்றும் விற்பனை உயர்ந்தது.
இந்நிலையில், நடந்த ஏலத்தில், '20.05 லட்சம் கிலோ இலை ரகம், 5.65 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 25.70 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. '16.39 லட்சம் கிலோ இலை ரகம், 3.58 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 19.97 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 21.29 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 106.60 ரூபாய் என இருந்தது. 2 ரூபாய் விரை வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில், 1.58 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது.
கடந்த வாரம், 83.58 சதவீத விற்பனையான நிலையில், 77.71 சதவீதம் என வீழ்ச்சியை கண்டது. எனினும், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், 1.96 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது. மொத்த வருமானமும், 1.64 கோடி ரூபாய் அதிகரித்தது.