/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அவலாஞ்சியில் 18 செ.மீ., மழை அணை நீர்மட்டம் 8 அடியாக உயர்வு அவலாஞ்சியில் 18 செ.மீ., மழை அணை நீர்மட்டம் 8 அடியாக உயர்வு
அவலாஞ்சியில் 18 செ.மீ., மழை அணை நீர்மட்டம் 8 அடியாக உயர்வு
அவலாஞ்சியில் 18 செ.மீ., மழை அணை நீர்மட்டம் 8 அடியாக உயர்வு
அவலாஞ்சியில் 18 செ.மீ., மழை அணை நீர்மட்டம் 8 அடியாக உயர்வு
ADDED : ஜூலை 16, 2024 12:51 AM

ஊட்டி:ஊட்டி அருகே அவலாஞ்சியில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது; நீர் மட்டம், 8 அடி வரை உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலுார், பந்தலுாரில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதுடன் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அவலாஞ்சியில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது. அவலாஞ்சி அணைக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 180 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருகிறது. 8 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கன மழைக்கு, ஊட்டி - கூடலுார் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன மழையை கருத்தில் கொண்டு பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
அந்தந்த பகுதி மண்டல குழுக்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.