/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தம்
ADDED : ஜூலை 23, 2024 11:57 PM
ஊட்டி:'போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 105 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஜெனரல் லேபர் யூனியன்(ஏ.ஐ.டி.யு.சி.,) ஊட்டி மண்டலத்தின் மகாசபை கூட்டம் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் பங்கேற்று பேசினார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:
பொது போக்குவரத்து சேவை மனப்பான்மையில் இயக்கப்படுகிறது. சாதாரண மக்களின் பயணங்களை அரசு போக்குவரத்து கழகம் தான் பூர்த்தி செய்கிறது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. 5 ஆயிரம் பேருந்துகள் லாபமுமில்லாமல், நஷ்டமுமில்லாமலும்; 5 ஆயிரம் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன. போக்குவரத்து கழகத்துக்கு வரும் வருவாயில், 70 சதவீதம் தனியாருக்கு செல்கிறது.
தற்போது, ஒப்பந்தம் முறையில் பணியிடங்கள் நிரப்ப அரசு ஆலோசிக்கிறது. நாங்கள் ஒப்பந்த முறையை எதிர்க்கிறோம். தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஊதியம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊதியம் சமன்பாடு நிர்ணயம் செய்ய வேண்டும். 105 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும்.
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான பண பலன்களை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்திற்கு, நீலகிரி கிளை தலைவர் மோகனன், பொது செயலாளர் சையது இப்ராஹிம் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.