/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி மண்டலத்தில் 10 புதிய பஸ்கள் இயக்கம் ஊட்டி மண்டலத்தில் 10 புதிய பஸ்கள் இயக்கம்
ஊட்டி மண்டலத்தில் 10 புதிய பஸ்கள் இயக்கம்
ஊட்டி மண்டலத்தில் 10 புதிய பஸ்கள் இயக்கம்
ஊட்டி மண்டலத்தில் 10 புதிய பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 17, 2024 11:48 PM

ஊட்டி : ஊட்டி மண்டலத்திலிருந்து பல்வேறு வழித்தடத்திற்கு, 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய பஸ்கள் இயக்கப்பட்டது.
ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் புதிய, 10 பஸ்கள் பல்வேறு வழித்தடத்திற்கு இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று புதிய பஸ்களை இயக்கி வைத்தார். இதில், ஊட்டி மண்டலத்திலிருந்து தொலைதுார வழித்தடங்களான, திருச்சி ,மதுரை, கள்ளிக்கோட்டை, தேனி,சேலம், ஈரோடு, கண்ணனுார், பாலக்காடு உள்ளிட்ட வழித்தடங்களுக்கு, 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய, 10 பஸ்கள் இயக்கப்பட்டது. ஏற்கனவே,16 புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடத்திற்கு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பொது மேலாளர் கணபதி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.