/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இ--பாஸ் எடுக்க உத்தரவிடும் போலீசார் அரசு ஊழியர்கள் அதிருப்தி இ--பாஸ் எடுக்க உத்தரவிடும் போலீசார் அரசு ஊழியர்கள் அதிருப்தி
இ--பாஸ் எடுக்க உத்தரவிடும் போலீசார் அரசு ஊழியர்கள் அதிருப்தி
இ--பாஸ் எடுக்க உத்தரவிடும் போலீசார் அரசு ஊழியர்கள் அதிருப்தி
இ--பாஸ் எடுக்க உத்தரவிடும் போலீசார் அரசு ஊழியர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 12, 2024 09:36 PM
குன்னுார், - குன்னுார்- மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைசாவடியில் உள்ளூர் மக்களையும் இ--பாஸ் எடுத்து வர கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஜூன், 30ம் தேதி வரை இ--பாஸ் நடைமுறையில் உள்ளது. இதற்காக இங்கு நாள்தோறும் இரு ஷிப்ட் முறைப்படி பணியாளர்கள், போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஊட்டிக்கு வந்த ரயில்வே ஊழியர்களை போலீசார் தடுத்து, கட்டாயம் இ-பாஸ் எடுத்து செல்ல கூறியுள்ளனர்.
உள்ளூருக்கான ஆதார் கார்டு, ரயில்வே அடையாள அட்டை காண்பித்தும் அனுமதியை மறுத்து, கட்டாயம் இ-பாஸ் எடுத்து செல்ல போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கு வந்த மற்ற பணியாளர்கள் ரயில்வே ஊழியர்களை அனுப்பி வைத்தனர்.
ரயில்வே ஊழியர்கள் கூறுகையில்,' சீசன் முடிந்த பிறகும் உள்ளூர் மக்களையும், அரசு ஊழியர்களையும் போலீசார் தடுப்பது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.