/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பைக்குகள் மோதி விபத்து இளம்பெண், மாணவர் பலி பைக்குகள் மோதி விபத்து இளம்பெண், மாணவர் பலி
பைக்குகள் மோதி விபத்து இளம்பெண், மாணவர் பலி
பைக்குகள் மோதி விபத்து இளம்பெண், மாணவர் பலி
பைக்குகள் மோதி விபத்து இளம்பெண், மாணவர் பலி
ADDED : மார் 26, 2025 01:34 AM
மோகனுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுார் ராசிகுமரிபாளையம் தெருவை சேர்ந்தவர் நவீன், 29; தனியார் காஸ் ஏஜன்சியில் பணிபுரிகிறார். இவரது மனைவி தன்யா, 25; மோகனுார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்தார். நவீன் மாமியார் கோகிலா, 45. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, நவீன், மனைவி, மாமியாரை, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் அழைத்துக் கொண்டு, மோகனுார் - நாமக்கல் சாலை, காட்டூர் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, இன்ஜினியரிங் மாணவர்களான, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 19, கள்ளக்குறிச்சி மாவட்டம், கொசப்பாடியை சேர்ந்த இளவரசன், 18, 'யமஹா' பைக்கில் மோகனுார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நவீன் பைக் மீது மோதினர்.
இதில், ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். யாரும் தலைக்கவசம் அணியவில்லை. தன்யா, பாலகிருஷ்ணன் உயிரிழந்தனர். நவீன், கோகிலா, இளவரசன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.