/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்
இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்
இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்
இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்
ADDED : மே 31, 2025 06:41 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் அமுதா, 39; இவரது மகள் தனுசா, 18; பிளஸ் 2 படித்துள்ளார். இந்நிலையில், கடந்த, 25 காலை, அமுதா வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டிலிருந்த மகள் தனுசாவை காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் தனுசாவை கண்டுபிடித்து தரக்கோரி, குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். அதன்படி, போலீசார், காணாமல் போன தனுசாவை தேடி வருகின்றனர்.