/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை 'லைசென்ஸ்' பெற விண்ணப்பிக்கலாம் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை 'லைசென்ஸ்' பெற விண்ணப்பிக்கலாம்
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை 'லைசென்ஸ்' பெற விண்ணப்பிக்கலாம்
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை 'லைசென்ஸ்' பெற விண்ணப்பிக்கலாம்
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை 'லைசென்ஸ்' பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 13, 2025 01:38 AM
நாமக்கல், 'தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிடடு, நாமக்கல் மாவட்டத்தில், வெடி பொருட்கள் சட்டத் தின் கீழ், தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர், விதிமுறைகளை பின்பற்றி, 'ஆன்லைன்' மூலம் வரும் அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இ--சேவை மையம் மூலம் பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை (பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் நகல்) இணைக்க வேண்டும்.
லைசென்ஸ் கட்டணம், 600 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தி ரசீது இணைக்க வேண்டும். இடத்திற்கான பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டடம் எனில் பட்டா, வாடகை கட்டடம் எனில் ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி, ஏ4 அளவில் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் லைசென்சையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான உத்தரவையும் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை அமைக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.