/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரத்தில் டைடல் பார்க் பணி துவக்கம்: எம்.பி., பெருமிதம் ராசிபுரத்தில் டைடல் பார்க் பணி துவக்கம்: எம்.பி., பெருமிதம்
ராசிபுரத்தில் டைடல் பார்க் பணி துவக்கம்: எம்.பி., பெருமிதம்
ராசிபுரத்தில் டைடல் பார்க் பணி துவக்கம்: எம்.பி., பெருமிதம்
ராசிபுரத்தில் டைடல் பார்க் பணி துவக்கம்: எம்.பி., பெருமிதம்
ADDED : ஜூலை 01, 2025 01:35 AM
ராசிபுரம், ராசிபுரம் தொகுதியில், தி.மு.க., அரசின், நான்கு ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், நேற்று நடந்தது. ஆண்டகலுார் கேட் பகுதியில் நடந்த கூட்டத்தில், எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''தி.மு.க, அரசு பெண்கள், மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது விடுபட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பெங்களூரு, கோவையில் இருப்பதுபோல், ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமையவுள்ளது. நம் பகுதி மாணவர்கள் படித்துவிட்டு வெளியூரில் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இருக்காது. டைடல் பார்க் கட்டுவதற்கான ஒப்பந்த பணிகள் விடப்பட்டுள்ளன,'' என்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், தொகுதி பொறுப்பாளர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல், பிள்ளாநல்லுார் பகுதியிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், டவுன் பஞ்., தலைவர் சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், பேரூர் இளைஞரணி முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.