/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 20, 2025 01:11 AM
பள்ளிப்பாளையம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா என, பள்ளிப்பாளையம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவர். பள்ளிப்பாளையத்தில் எலந்தகுட்டை, சின்னார்பாளையம், ஆலாம்பாளையம், புதுப்பாளையம், களியனுார், சமயசங்கிலி, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது.
வாய்க்காலில் தண்ணீர் வரும் சமயத்தில், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, 114 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது.
காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, விரைவில் பாசனத்திற்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படுமா என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.