/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கிராம சபை கூட்டம் நடக்குமா? பஞ்., மக்கள் எதிர்பார்ப்புகிராம சபை கூட்டம் நடக்குமா? பஞ்., மக்கள் எதிர்பார்ப்பு
கிராம சபை கூட்டம் நடக்குமா? பஞ்., மக்கள் எதிர்பார்ப்பு
கிராம சபை கூட்டம் நடக்குமா? பஞ்., மக்கள் எதிர்பார்ப்பு
கிராம சபை கூட்டம் நடக்குமா? பஞ்., மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் யூனியனில் உள்ள, 15 பஞ்., பகுதியிலும் விரைவில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனில் உள்ள, 15 பஞ்., பகுதியிலும் கடந்த மே 1ல், நடத்த வேண்டிய கிராம சபை கூட்டம் நடத்தவில்லை.
இதில் வரவு, செலவு கணக்கு, அரசு திட்டங்கள், பஞ்.,ல் செய்யப்பட வேண்டிய பணிகள், வளர்ச்சி திட்டங்கள், பொது மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். கடந்த, 6ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் இது வரை கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வரவில்லை.பள்ளிப்பாளையம் யூனியனில், 15 பஞ்.,கள் உள்ளது. கிராம சபை கூட்டத்தில், தீர்க்கப்படாத பிரச்சனைகள், குறைகளை கோரிக்கை மனுவாக அளித்தால், விரைவில் தீர்வு ஏற்படும். மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. மே, 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தவில்லை. எனவே, விரைவில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.